மீண்டும் புதிய உச்சத்தில் Nifty 50, இந்த பங்குகள் மீண்டும் உயரக்கூடும்...

 Nifty 50 ஆனது ஏற்கனவே 22122 என்ற புதிய உச்சத்தை கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி அன்று தொட்டது, ஆனால் அது நீடிக்கவில்லை, அடுத்த நாள் முதலே மீண்டும் சரிவை நோக்கிப் பயணித்தது, அது அடுத்த மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 800 புள்ளிகள் சரிந்து 21287 வரை சென்றது. இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடையப்போகுது என்று பயத்தில் பலரும் இருந்தபோது அடுத்த 10 நாட்களில் மீண்டும் 22122 அடைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 22187 என்ற புதிய உயர்வைச் சென்று திரும்பியுள்ளது.

Nifty 50 at new highs again, these stocks may rise again...
 Nifty 50

பாதுகாப்பான முதலீடு செய்ய நினைப்பவர்கள் Nifty 50யில் இருக்கும் பங்குகளில் கவனம் செலுத்தலாம், இந்திய பங்கு சந்தையில் சிறந்த மற்றும் முதல் 50 நிறுவனங்களைக் கொண்டு தான் Nifty 50 உருவாக்கி இருக்கிறார்கள், அவற்றில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது, அவற்றில் தற்போது கவனம் செலுத்தினால் அடுத்த 2, 3 ஆண்டுகளில் நல்ல லாபம் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஒருசில Nifty 50 இருக்கும் முக்கிய பங்குகள்பற்றிப் பார்க்கலாம்

RELIANCE:

RELIANCE நிறுவனமானது கடந்த 5 ஆண்டுகளில் 140% சதவீதம் லாபம் கொடுத்துள்ளது, 2020 ஆம் ஆண்டுகளில் 800 ரூபாய் விலையில் இருந்த ஒரு பங்கு தற்போது 2948 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மாட்டும் 16% உயர்வையும் அதேபோலக் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10% உயர்வைக் கொடுத்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த 5 ஆண்டுகளில் 36ரூபாய் வரை டிவிடெண்ட் கொடுத்துள்ளது.

BAJAJ AUTO

இந்த நிறுவனமானது கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 118% உயர்ந்துள்ளது, கிட்டத்தட்ட 2023 ஆம் ஆண்டில் 3500 ரூபாய் இருந்து ஒரு பங்கின் விலை தற்போது 8509 விலையில் வர்த்தகமாகி வருகிறது, அதாவது ஒரு பங்கிற்கு 4600ரூபாய் லாபம் கொடுத்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் 2020இல் இருந்து கடந்த ஆண்டுவரை BAJAJ AUTO நிறுவனமானது 500 ரூபாய் வரை டிவிடெண்ட் கொடுத்து இருக்கிறது. மேலும் கடந்த மாதத்தில் மட்டும் 20%(1400ரூபாய்) வரை லாபம் கொடுத்து இருக்கிறது.

ICICI BANK மற்றும் SBI 

ICICI BANK கடந்த 5ஆண்டுகளில் 195% சதவீதம் லாபம் கொடுத்துள்ளது, 2020 ஆம் ஆண்டுகளில் 290 ரூபாய் விலையில் இருந்த ஒரு பங்கு தற்போது 1043 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுகளில் மட்டும் 22% லாபம் கொடுத்துள்ளது.

SBI ஆனது கடந்த 5ஆண்டுகளில் 180% சதவீதம் லாபம் கொடுத்துள்ளது, 2020 ஆம் ஆண்டுகளில் 150 ரூபாய் விலையில் இருந்த ஒரு பங்கு தற்போது 759 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுகளில் மட்டும் 44% லாபம் கொடுத்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் அதிக லாபம் கொடுத்த Nifty 50 பங்குகள்

அதிக லாபம் கொடுத்த முதல் 15 நிறுவனங்கள்

அதிக லாபம் கொடுத்த முதல் 15 நிறுவனங்கள்

அதிக லாபம் கொடுத்த அடுத்த 10 நிறுவனங்கள்

nifty 50 best stocks swing trading 2024

இந்த வரிசையில் இன்னும் பல நிறுவனங்கள் நன்றாக இயங்கி வருகிறது. மேலும் இதுபற்றித் தெரிந்துகொள்ள TEA TIME TRADERS YOUTUBE சேனலைப் பார்வையிடவும்.

Previous Post Next Post