நிஃப்டி ரியாலிட்டி 10 வருட உயர்வை கொடுத்து உள்ளது.

நேற்று மட்டும் நிஃப்டி ரியாலிட்டி Index ஆனது 5% க்கு மேல் உயர்ந்து இருக்கிறது. புதிதாக 10 வருட உயர்வை பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. நிஃப்டி ரியாலிட்டியில் இருக்கும் பத்து பங்குகளும் தற்போது அதிக வர்த்தகத்தில் உள்ளன, இந்த ஆண்டு நிஃப்டி ரியாலிட்டி 41% உயர்ந்துள்ளது அதுமட்டுமின்றி நேற்று நிஃப்டி ரியாலிட்டி ஆனது கடந்த 15 ஆண்டுகளில் அதன் அதிகபட்ச அளவைப் பதிவு செய்தது.

Nifty Realty has given a 10-year rise.
Nifty Realty has given a 10-year rise.

நீங்கள் இதன் Chart-யை பார்த்தல் தெரியும் 560 என்ற இடத்தில சப்போர்ட் எடுத்து திரும்பி இருப்பது. இது நேற்று வரை பாஸிட்டிவாகவே இருந்து இருக்கிறது. தற்போது 612.25 என்ற புதிய உச்சத்தை கொடுத்து இருக்கிறது. இந்த போக்கு தொடர்ந்தால், அடுத்தகட்டமாக 720 என்ற நிலைகளை நோக்கி செல்லலாம். 

பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸ் 15%க்கும் அதிகமாக உயர்ந்து, 10 பங்குகளில் இது அதிக லாபம் கொடுத்துள்ளது. நேற்று இந்த பங்கு விலை 52 வார உச்சத்தைத் தொட்டது. ப்ரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸ் இரண்டாவது காலாண்டில் விற்பனை முன்பதிவு இரண்டு மடங்கு அதிகரித்து ₹7,092 கோடியாக பதிவு செய்துள்ளது. நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் இதை உங்களது கவனத்தை செலுத்தி பகுப்பாய்வுகளை மேற்கொள்ளுங்கள். இந்த பங்கானது நேற்று மட்டும் 670யில் ஓபன் செய்து அதிகபட்சமாக 796.40 வரை சென்று தற்போது 727.50 வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சோபா லிமிடெட் மற்றும் டிஎல்எஃப் லிமிடெட் பங்குகளும் 52 வார உச்சத்தைத் தொட்டன. கோத்ரேஜ் பிராப்பர்டீஸ் லிமிடெட், ஓபராய் ரியாலிட்டி லிமிடெட், மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் மற்றும் ஃபீனிக்ஸ் மில்ஸ் போன்ற மற்ற பங்குகள் 52 வார உயர் மட்டங்களுக்கு அருகில் சென்று 2% முதல் 7% வரை அதிகரித்தன. இந்த பங்குகளை Intraday வர்த்தகத்தில் கவனம் செலுத்துங்கள்.

Previous Post Next Post